முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுவை வாபஸ் பெற வேண்டும்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.23 - முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் ஒரு தற்காலிகப் பாதுகாப்புக் குழுவை உருவாக்கும் பொறுப்பை மத்திய அரசு ஒப்படைத்திருப்பது நியாயமானதல்ல. இது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தத்தான் வழி வகுக்கும் என்று திக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு மறைமுகமாக கேரள அரசின் போக்குக்கு இணங்குகிறதோ என்ற அச்சம் ஏற்படும் வகையில், அணை விவகாரத்தில் கேரளா அரசின் நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டு, மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் ஒரு தற்காலிகப் பாதுகாப்புக் குழுவை உருவாக்கும் பொறுப்பைப் ஒப்படைத்திருப்பது நியாயமானதல்ல; தேவையானதும் அல்ல. அது கண்டனத்திற்குரியது.

உடனே அந்தக் குழு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அந்தக்குழு நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.

உடனடியாக அதனை ரத்து செய்து அறிவிப்பு வருவதோடு, அணையைப் பாதுகாக்க மத்திய ரிசர்வ் படையை அனுப்ப வேண்டும்.இவ்வாறு வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்