முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ. ஆட்சி அமைக்க ஆதரவா? ஷீலா திட்சித் திடீர் பல்டி

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப்.15 - டெல்லியில் பாஜ அரசு அமைக்க நான் ஒரு போதும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் ஷீலா திட்சித் திடீர் பல்டி அடித்துள்ளார்.

டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது. ஆனால், கெஜ்ரிவால் தலைமையிலான அந்த ஆட்சி 49 நாட்களில் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், டெல்லியில் சட்டசபை முடக்கி வைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபையை கலைத்து தேர்தல் நடத்த வேண்டுமென ஆம் ஆத்மி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தற்போது தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜவை ஆட்சியமைக்க அழைக்கலாம் என ஜனாதிபதிக்கு கவர்னர் நஜீப் ஜங் பரிந்துரை செய்தார். இதன்படி, பாஜ ஆட்சி அமைக்க முயன்று வருகிறது. இந்நிலையில், தனிப்பெரும் கட்சியான பாஜ ஆட்சி அமைப்பதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஷீலா திட்சித் கூறினார். அவர் சொல்வது சரிதான் என டெல்லி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் கூறினர்.

இது காங்கிரஸ் தலைவர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷீலா திட்சித் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து என கூறியதுடன் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், ஷீலா திட்சித் திடீரென பல்டி அடித்துள்ளார். அவர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், டெல்லியில் பாஜ ஆட்சி அமைக்கலாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்களுக்கு போதிய மெஜாரிட்டி இருந்தால் ஆட்சி அமைக்கட்டும் என்றுதான் நான் சொன்னேன் என்று கூறியுள்ளா3ர்.

காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்பு மற்றும் தனது மகன் சந்தீப் தீட்சித்துக்கு கட்சியில் பிரச்னை வரக் கூடாது என்றுதான் ஷீலா பல்டியடித்ததாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்