முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசில் நேரு குடும்பத்தை தவிர்த்து தலைவர்களாக இருந்தவர்கள் பட்டியல் பிரதமருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட ப.சிதம்பரம்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தைத் தவிர்த்து யாரெல்லாம் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் என்ற பட்டியலை பிரதமர் மோடிக்கு டுவிட்டர் மூலம் அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சிக்கு 5 ஆண்டுகள் நேரு குடும்பத்தைத் தவிர்த்து வேறு யாரையாவது தலைவராக நியமித்து இருக்கிறார்களா, நியமிக்க தயாராக இருந்திருக்கிறார்களா என்று ராகுல் காந்திக்குச் சவால் விட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-சுதந்திரத்துக்குப் பின், காங்கிரஸ் கட்சியில் எளிய பின்னணியைக் கொண்ட பலர் தலைவர்களாக வந்திருக்கிறார்கள். பாபசாகேப் அம்பேத்கர், லால் பகதூர் சாஸ்திரி, கே.காமராஜ், மன்மோகன் சிங், ஆச்சார்யா கிரிபாலினி, பட்டாபி சீதாரமையா, புருஷோத்தம் தாஸ் டான்டன், யு.என்.தேபர், சஞ்சீவ ரெட்டி, சஞ்சிவையா, காமராஜ், நிஜலிங்கப்பா, சி.சுப்பிரமணியன், ஜகஜீவன் ராம், சங்கர் தயால் சர்மா, டி.கே. பரூஹா, பிரம்மானந்தா ரெட்டி, பி.வி. நரசிம்ம ராவ், சீதாராம் கேசரி ஆகியோர் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு முன்பும் பலர் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதைப் பிரதமர் மோடிக்கு நினைவு படுத்துகிறோம்.

காங்கிரஸ் தலைவர் தேர்வு குறித்து பிரதமர் மோடி பேசும் நேரத்தில் பாதி நேரத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, ரபேல், சி.பி.ஐ, ஆர்.பி.ஐ ஆகியவை குறித்தும் மோடி பேசலாம். விவசாயிகள் தற்கொலை, இளைஞர்கள்வேலையின்மையால் அவதிப்படுவது, கும்பல் வன்முறை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள், ஆன்ட்டி ரோமியோ படை, பசு குண்டர்கள் வன்முறை, அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்கள் ஆகியவை குறித்தெல்லாம் பிரதமர் மோடி பேசுவாரா?  இவ்வாறு ப.சிதம்பரம் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து