முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்ட தயாராகும் காளைகளுக்கு திண்டுக்கல்லில் தீவிர பயிற்சி

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்ட தயாராகும் காளைகளுக்கு திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் கிராமங்களிலும், நகரங்களிலும் தமிழகத்தில் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொன்றுதொட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தபோது அதில் இல்லாத ஆர்வம் இடைப்பட்ட சில வருடங்களில் அப்போட்டிக்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் மக்கள் எழுச்சி போராட்டமாக மாறிய பின்பு தான் ஜல்லிக்கட்டுக்கான மகத்துவம் மேலும் வெளிவர தொடங்கியது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல கிராமங்களில் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக காளைகளை தயார்படுத்தும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைப் போலவே திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப்பட்டி, மறவபட்டி, எ.வெள்ளோடு, பில்லமநாயக்கன்பட்டி, அய்யம்பாளையம், சாணார்பட்டி, கொசவபட்டி, அகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த கிராமங்களில் காளைகளுக்கு வீரர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். மணல் மேடுகளை குவித்து அதில் கொம்புகளால் முட்டி மோதச் செய்தல், நடைப்பயிற்சி, ஞிச்சல் பயிற்சி மற்றும் வீரர்கள் சூழ்ந்து அடக்க முயலும் போது முட்டித் தள்ளுதல் போன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காளைகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கையில், பரம்பரை பரம்பரையாக ஜல்லிக்கட்டுக்காக காளைகள் வளர்த்து வருகிறோம். இந்த காளைகள் திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் சென்று பரிசுகளை வென்று வரும் போது நாங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. இதற்காக காளைகளுக்கு சத்தான உணவுகள் அளித்து தற்போது தீவிர பயிற்சி அளித்து வருகிறோம். ஜல்லிக்கட்டு காளைகள் எங்கள் வீட்டு பிள்ளைகள் போலத் தான். அவற்றை வேறு எந்த வேலைக்கும் அனுமதிக்க மாட்டோம். எங்கள் மூதாதையர்கள் எங்களுக்கு அளித்த வழிகாட்டுதல் படி நாங்கள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து பராரமரித்து வருகிறோம். எங்களுக்கு பிறகு எங்கள் குழந்தைகளையும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கவும், போட்டியில் பங்கேற்கவும் செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து