முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீன்பிடி படகை மோதிய சிங்கப்பூர் சரக்கு கப்பல் சிக்கியது

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், மார்ச். - 5 - ஆலப்புழா அருகே மீன்பிடி படகு மீது மோதி விட்டு தப்பிச் சென்றது சிங்கப்பூர் சரக்கு கப்பல் என்று தெரியவந்துள்ளது.  அந்த கப்பலை உடனடியாக கொச்சி திரும்ப இந்திய கடற்படை உத்தரவு பிறப்பித்துள்ளது.  கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரை கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்ற டான் என்ற படகு மீது ஆலப்புழா அருகே நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத கப்பல் மோதியதில் கொல்லத்தை சேர்ந்த மீனவர்கள் ஜஸ்டின், சேவியர் பலியாயினர். இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 3 பேரை காணவில்லை. இந்த சம்பவம் நடந்தது நள்ளிரவு என்பதால் மோதிய கப்பலை மீனவர்கள் சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. மோதிய கப்பலை தேடும் பணி தொடங்கியது. அந்த வழியாக 13 கப்பல்கள் சென்றது தெரியவந்தது. தீவிர விசாரணைக்கு பின்னர் சிங்கப்பூர் கப்பல் ஒன்றை கடற்படையினர் கோவா - சிங்கப்பூர் நீர்வழிச்சாலையில் மடக்கினர். முதல் கட்ட விசாரணையில் படகு மீது மோதியது அந்த கப்பல்தான் என தெரியவந்தது. எனவே அந்த கப்பலை கொச்சி துறைமுகத்திற்கு திரும்புமாறு கடற்படை உத்தரவிட்டது. இதையடுத்து அந்த கப்பல் 2 ம் கட்ட விசாரணைக்காக உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே காணாமல் போன 3 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்