முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீங்கள் விண்ணை ஆண்டு, எங்கள் இதயங்களை கைப்பற்றிவிட்டீர்கள் - அபிநந்தனை வரவேற்ற பி.சி.சி.ஐ

சனிக்கிழமை, 2 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : நீங்கள் விண்ணை ஆண்டு, எங்கள் இதயங்களையும் கைப்பற்றிவிட்டீர்கள் என்ற வாசகத்துடன் அபிநந்தனை வித்தியாசமாக இந்திய கிரிக்கெட் வாரியம் வரவேற்றது.

இந்தியா வலியுறுத்தல்...

பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் ரக போர் விமானம் மூலம் பதிலடி கொடுத்த இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். இந்திய விமானியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொண்டது.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், “அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுதலை செய்யப்படுகிறார்” என்று தெரிவித்தார். அதன்படி, லாகூரில் இருந்து காரில் அழைத்துவரப்பட்ட அபிநந்தன், இன்று (மார்ச் 1) மாலை 5.30 மணியளவில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

உத்வேகமாக இருக்கும்...

இந்நிலையில், அபிநந்தன் வருகை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது ட்விட்டரில், “நீ விண்ணை ஆண்டு, எங்கள் இதயங்களையும் கைப்பற்றிவிட்டீர்கள். உங்களது கண்ணியம் மற்றும் தைரியம் ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகமாக இருக்கும்” என பதிவிட்டு இருந்தது. அத்துடன், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பர் ஒன் என்ற ஜெர்சியை அபிநந்தன் பெயரிட்டு வெளியிட்டிந்தது. அதேபோல், அபிநந்தனை வரவேற்று கேப்டன் விராட் கோலி, தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பலர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து