முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி மகளின் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 6 மே 2019      விளையாட்டு
Image Unavailable

டோனியின் ரசிகர்கள் அனைவருமே அவரது மகள் ஜிவாவுக்கும் ரசிகர்களாகிவிட்டனர். அவரது மகளும் அவரும் சேர்ந்து பலமுறை மைதனாங்களில் வலம் வரும் காட்சிகளும், சேர்ந்து செய்யும் சேட்டைகளும் வீடியோவாக வைரல் ஆகியுள்ளது.  டோனி இத்தனை அளவு பிசியாக இருந்த போதிலும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் அவர் பொறுப்புடனே செயல்பட்டு வந்துள்ளார்.

அந்த வகையில் டோனியின் ஜனநாயகக் கடைமையை வெளிப்படுத்தும் வகையில் தற்போது ஜிவா ஒரு டயலாக் பேசியுள்ளார். அதில் ஜிவா, “போங்க என் அப்பாவை போன்று வாக்களியுங்கள்” எனக் குழந்தை தனத்துடன் கூறுவது மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது. அவருடன் டோனியும் இருக்கிறார். இந்த வீடியோவை டோனி அவரது இண்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்குள் நுழையும் முதல் தகுதிச் சுற்று நடைபெறுகிறது. இந்த சூழலிலும் டோனி தனது ஜனநாயகக் கடைமையை ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து