முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் அதிபர் வரும் 8-ம் தேதி அஜ்மீர் வருகிறார்?

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.- 2 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி வரும் 8-ம் தேதி தொழுகை நடத்துவதற்காக இந்தியாவில் உள்ள அஜ்மீருக்கு வரலாம் என்று தெரிகிறது. பாகிஸ்தான் அதிபராக இருக்கும் ஜர்தாரி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார். மேலும் அவருக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவர் துபாய் நாட்டுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் அவர் அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாகக்கூட கூறப்பட்டது. இந்தநிலையில் அதிபர் ஜர்தாரி வரும் 8-ம் தேதி அஜ்மீர் வரலாம் என்று கூறப்படுகிறது. அஜ்மீரில் உள்ள ஹவஜாமொய்னுதீன் சிஸ்தி மசூதிக்கு சென்று அவர் தொழுகை நடத்த உள்ளார்.
ஜர்தாரியின் இந்திய வருகை முழு முழுக்க மத வழிபாட்டிற்காகத்தான் வருகிறார் என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் அஜ்மீர் வரும் ஜர்தாரி ஒரு நாள் முழுவதும் இந்தியாவிலேயே இருக்கிறார். அதனால் அரசியல் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தாலும் நடக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜர்தாரி சந்தித்து பேசினாலும் பேசலாம். அதற்கும் அதிகாரிகள் தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க நகரில் உச்சி மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கும் ஜர்தாரியும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சந்தித்து பேசினார்கள். அதன் பிறகு இருவரும் சந்தித்து பேசவில்லை. சந்தித்து ஏறக்குறைய இரண்டு வருடங்களாகிவிட்டதால் இருவரும் சந்தித்து பேசும் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்