முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்களும் தனியாக போட்டியிடுவோம்: மாயாவதிக்கு அகிலேஷ் பதிலடி

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ, பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி முடிவுக்கு வந்தால் நாங்களும் தனித்தே போட்டியிடுவோம் என அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
 
உத்தரபிரதேசத்தில் 2019 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி அமைத்த சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பகுஜன் சமாஜ் 10 தொகுதிகளில் வென்ற நிலையில் சமாஜ்வாடி 5 தொகுதிகளில் வென்றது. மாநிலத்தில் 11 எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட்டு எம்.பி. ஆகியுள்ளனர். எனவே 11 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் மகா கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாயாவதி இடைத்தேர்தலில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் எனக் கூறியுள்ளார்.

சமாஜ்வாடியில் இருந்து விலகிய சிவபால் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சி யாதவ மக்களின் வாக்கை பிரிக்கிறது. கூட்டணி பயனற்றது. யாதவ சமுதாயத்தினரின் வாக்குகள் வரவில்லை. அகிலேஷ் யாதவ் குடும்பத்தாரால் கூட யாதவ மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற முடியவில்லை. எனவே இடைத்தேர்தலை தனியாகவே சந்திப்போம் என மாயாவதி கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியது. தனித்து போட்டியிடுவதை மாயாவதியும் அறிவித்து விட்டார். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி முடிவுக்கு வந்தால் நாங்களும் தனித்தே போட்டியிடுவோம் என அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து