முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க சம்பவம் எதிரொலி: 17-ம் தேதி நாடு முழுவதும் டாக்டர்கள் ஒரு நாள் ஸ்டிரைக்: இந்திய மருத்துவர் சங்கம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

மேற்கு வங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து வரும் 17 - ம் தேதி அன்று நாடு முழுவதும் அனைத்து டாக்டர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக, இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 5 நாட்களுக்கு  முன்பு, கொல்கத்தா மருத்துவமனை ஒன்றில், நோயாளியின் உறவினர் ஒருவர் இளநிலை டாக்டர் ஒருவரை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அந்த டாக்டர் சிகிச்சைபெற்று வருகிறார். இதனை கண்டித்து 5 - வது நாளாக மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் அனைவரும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். டாக்டர்கள் 4 மணிநேரத்திற்குள் போராட்டத்தை விட்டுவிட்டு, பணியில் சேராவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துப் பார்த்தார். எனினும் அங்கு போராட்டம் தொடர்கிறது.

இதனிடையே டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் என்று நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள பல நகரங்களுக்கும் போராட்டம் பரவியது. தலையில் கட்டுப்போட்டும், சக்கர நாற்காலிகளில் அமர்ந்தும், சிகிச்சையின் போது ஹெல்மெட்டுகளை அணிந்தவாறும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனிடையே, டாக்டர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், ஜூனியர், சீனியர் டாக்டர்கள் என்று அனைத்து தரப்பினரும் வரும் 17 ல், ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக, ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் கறுப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் பணியாற்றுமாறும் பணித்துள்ளது. எனினும், ஸ்டிரைக் மற்றும் போராட்ட நேரங்களில் அவசரசிகிச்சை பிரிவு டாக்டர்கள் பணியை மேற்கொள்வார்கள் என்றும் அந்த சங்கத்தின் அறிக்கை கூறுகிறது. இந்தப் போராட்டங்களில், நாடெங்கிலும் அறுவை சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை நோயாளிகள் ஆயிரக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து