முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 டன் போதைபொருள் கடத்தி வந்த சரக்கு கப்பல் அமெரிக்காவில் சிக்கியது

புதன்கிழமை, 10 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க கடல் பகுதியில், 20 டன் அளவிற்கு கொகைன் போதைப் பொருள் கடத்தி வந்த பிரமாண்டமான சரக்குக் கப்பலை அமெரிக்க அதிகாரிகள் சிறை பிடித்துள்ளனர்.

ஜே.பி. மோர்கன் அசட் மேனேஜ்மென்ட், உலகிலேயே 2-வது பெரிய சரக்குக் கப்பல் நிறுவனமாகக் கருதப்படுகிறது. இந்தக் குழுமத்தைச் சேர்ந்த எம்.எஸ்.சி. கயான் என்ற 10 ஆயிரம் கண்டெய்னர்களைக் கையாளும் திறன் கொண்ட கப்பல் அமெரிக்காவின் பிலடெல்பியா துறைமுகத்திற்கு வந்தது. அந்த கப்பலில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அமெரிக்க சுங்கத் துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டதில், சுமார் 20 டன் அளவிற்கு கொகைன் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதைப் பொருள் எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு போதைப் பொருள் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்டிருப்பது கடந்த 230 ஆண்டுகளில் இதுவே முதன்முறை என்கின்றனர் அமெரிக்க சுங்கத்துறையினர்.

இந்தக் கப்பல் பஹாமாஸில் இருந்தும், சிலியிலிருந்தும் பொருட்களை ஏற்றி வந்தது தெரியவந்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கப்பலில் இருந்த 8 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து