முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தப்பட்ட எம்.எல்.ஏவை விடுவிக்க கெடுவை நீட்டித்த மாவோயிஸ்டுகள்

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புவனேஸ்வரம், ஏப். - 16 - வருகிற 18 ம் தேதி மாலை 5 மணிக்குள் சிறையில் இருக்கும் 30 கைதிகளில் 29 பேரை அரசு விடுவித்த பிறகுதான் கடத்தப்பட்ட லெட்சுமிபூர் எம்.எல்.ஏ. ஜினாஹிகாகாவை விடுவிக்க முடியும் என்று மாவோயிஸ்டுகள் தங்கள் கெடுவை நீட்டித்து அறிவித்து விட்டார்கள்.  முன்னதாக இவர்கள் தாங்கள் குறிப்பிடும் 30 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தனர். ஆனால் அந்த 30 வது நபரை விடுவிக்க ஒடிசா அரசு தயக்கம் காட்டியது. இதையடுத்து 29 பேரையும் அரசு விடுவிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் அமைப்பின் ஆந்திர, ஒடிசா எல்லை பகுதி சிறப்பு மண்டல கமிட்டி அறிவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் அமைப்பின் மண்டல கமிட்டி சார்பாக அருணா என்பவர் தெலுங்கு மொழியில் பேசி ஒரு ஆடியோ சி.டியை வெளியிட்டுள்ளார். 

அதில் சிறையில் இருக்கும் கைதிகள் விடுவிக்கப்பட்ட பிறகுதான் வழக்கறிஞர் நிகார் ரஞ்சன் பட்நாயக் முன்னிலையில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்தார். அதே நேரம் கைதிகளை விடுவிக்கும் இடத்திற்கு போலீசாரோ, உளவுப் பிரிவு அதிகாரிகளோ வரவழைக்கப்பட்டால் பிறகு நடப்பதே வேறு என்றும் மாவோயிஸ்டு அமைப்பின் பிரதிநிதி எச்சரித்தார். இந்த விவகாரம் குறித்து ஒடிசா அரசின் கருத்து என்னவென்றால் ஹாசி என்ற மாவோயிஸ்டை தவிர மற்ற 29 பேரையும் விடுவிப்பதாக அரசு கூறுகிறது. காரணம், ஹாசி மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதை காரணம் காட்டி அவரை விடுவிக்க மறுக்கிறது ஒடிசா அரசு.  ஆனால் மாவோயிஸ்டு அமைப்பினரோ தங்கள் கெடுவை தற்போது நீட்டித்துள்ளனர். ஏப்ரல் 18 ம் தேதிக்குள் 29 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கெடுவை நீட்டித்துள்ளனர். சிறையில் இருக்கும் மாவோயிஸ்டு அமைப்பினரோ நாங்கள் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய மாட்டோம். அரசே வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். எது எப்படியோ கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. விவகாரம் இழுபறியிலேயே போய்க் கொண்டிருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்