முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்து வாழ்த்து

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார்.

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள பர்செல் நகரில் நடந்தது. இதில் பங்கேற்ற இந்தியாவின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.  நாட்டுக்கு பெருமை சேர்த்த அவருக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்த வண்ணமாய் இருக்கிறது. இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர வைத்து பெருமை சேர்த்த பி.வி.சிந்து டெல்லிய திரும்பிய போது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து பி.வி.சிந்து பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து