முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

புதன்கிழமை, 1 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறப்பு நேற்று காலை முதல் 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்தது. இதனால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்ததால் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் காவிரி டெல்டா பகுதியில் மழை குறைந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு நேற்று காலை முதல் 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்பட்ட தண்ணீர் காவிரியில் சீறிப்பாய்ந்து செல்கிறது. மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு வழக்கம் போல 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் 1929 கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று 1926 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நேற்று முன்தினம் 118.70 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 118.63 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து