எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர், மார்.29 - இலங்கையில் தமிழர்களை சிங்கள ராணுவத்திற்கு காட்டிக்கொடுத்து தமிழ் இனத்தையே அழித்தவர் கருணாநிதி என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். சர்வாதிகாரி ஆட்சிக்கு எதிராக எகிப்தில் வெடித்த மக்கள் புரட்சியைப்போல் கருணாநிதி குடும்ப ஆட்சிக்கு எதிராக நீங்கள்ல் எல்லாம் இங்கே எழுச்சியுடன் கூடி இருக்கிறீர்கள். பிறரை வாழவைப்பவர்கள் தமிழர்கள். வாழவைத்த தமிழர்களை வஞ்சிப்பவர் கருணாநிதி என்றும் ஜெயலலிதா கூறினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த பல நாட்களாக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று தஞ்சாவூரில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கச்சத்தீவை தாரை வார்த்தவர் கருணாநிதி. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தட்டிக் கேட்காதவர் கருணாநிதி. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்து அவர்களை அழித்தவர் கருணாநிதி. அவர் ஒரு இனத்துரோகி. நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்தவர் கருணாநிதி. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர் கருணாநிதி. இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர் கருணாநிதி. இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியவர் கருணாநிதி.
கற்காலத்திற்குச் சென்று கொண்டிருக்கும் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகும். ஆட்சிக்கு வந்தவும் தமிழகத்தில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டப்படும். அனைவருக்கும் 20 கிலோ தரமான இலவச அரிசி வழங்கப்படும். தாய்மார்களுக்கு இலவச பேன், மிக்சி,கிரைண்டர் ாக வழங்கப்படும். பிளஸ்1, பிளஸ்2 பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியரும் இலவச லேப்டாப் பெற்றிட, 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக 1000 முதல் 5000 ரூபாய் வரை உயர்த்தி தரப்படும். வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம் அளிக்கப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 1,80,000 ரூபாய் செலவில் 300 சதுர அடியில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோருக்கான உதவித்தொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும். கேபிள் தொழிலை அரசுடமையாக்கி அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டி.வி இணைப்பு குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். 60000 பால் கறவை மாடுகளை இலவசமாக 6000 கிராமங்களுக்கு அளிக்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 2500 ரூபாயாக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கு இலவசமாக சொட்டு நீர் பாசன வசதி செய்து தரப்படும். விவசாயிகளுக்கு தரமான விதைகள் மற்றும் இடுபொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் அளவிற்கு வழங்கும் கடனில் 25 விழுக்காடு மானியம் அளிக்கப்படும். 25 ஆயிரம் ரூபாய் திருமண உதவித் தொகையுடன் மணப்பெண்ணிற்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும். 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கப்ப்டும். தடையில்லா மின்சாரம் சப்ளை செய்யப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரியஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும். தமிழகம் எங்கும் உள்ள குடிநீர் பிரச்சனைகள் தீர, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். கட்டுக்கடங்காமல் ஏறியுள்ள விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவரப்படும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை மேம்படுத்தப்படும். சாலை இல்லாத ஊர்களுக்கு சாலை வசதி செய்து தரப்படும். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தப்படும். கடந்த 5 ஆண்டுகால மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் மீனவர்கள் ஆகிய உழைக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பினையும் உறுதி செய்யப்படும். தொழில் வளம் பெருகவும், தொழில் அமைதியை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்படும். சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும், பாதாள சாக்கடைத்திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட, கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கக்கூடிய உழவர் பாதுகாப்புத்திட்டத்தினை புதுப்பொலிவுடன் மீண்டும் செயல்படுத்திட, நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்களைத்தொடர்ந்து செயல்படுத்திட, நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட, ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ள தமிழ்நாட்டில் மக்களை மீட்டிட, கருணாநிதி குடும்பத்தினர் உட்பட தி.மு.கவினரால் ஏழை எளிய மக்களிடமிருந்து மிரட்டிவாங்கப்பட்ட சொத்துக்களை மீட்டு உரியவர்களியம் திருப்பிக் கொடுத்திட, ஒரு ரவுடிக் கும்பல் தமிழக மக்களை அடக்கி ஆள்வதற்கு முற்றுப்புள்ளி வைத்திட அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கவேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட