எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்-ராமநாதபுரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து மேற்கொண்ட கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 16 மண்டல குழுக்களும், 33 மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட எல்லைகளில் 3 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளியூர்களிலிருந்து வரும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள், பிற வாகனங்கள் அனைத்திலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கண்வாடி மையங்களுக்கு 31.03.2020 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை குழுக்களாக கூடுவதையோ, வெளியில் செல்வதையோ தவிர்த்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்திலுள்ள 10 அரசு மருத்துவமனைகள், 59 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 259 துணை சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1077, 1800 425 7038 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக தனிமைப்படுத்தி சிறப்பு மருத்துவ சிகிச்சை அளித்திட 86 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு கைகளை சுத்தமாக கழுவி பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதோடு, தேவையற்ற பயணங்களையும், கூட்டமாகக் கூடும் நிகழ்வுகளையும் தவிர்த்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்டை நாடுகளிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மொத்தம் 245 நபர்கள் சொந்த ஊர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டு இதுவரை 203 நபர்கள் தனிமைப்படுத்தும் காலம் முடிந்து கொரோனா தொற்று ஏதுமில்லாமல் நலமுடன் உள்ளனர். மீதமுள்ள 42 நபர்களும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கும் இதுவரை கொரோனா அறிகுறி ஏதும் தென்படவில்லை. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் இல்லை. பொதுமக்கள் கொரோனா தொடர்பாக அச்சம் கொள்ள தேவையில்லை. இருப்பினும் விழிப்புடன் இருந்திட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட கலெக்டர் ராமநாதபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும், பொது சுகாதாரத் துறையின் மூலம் கை கழுவும் முறை குறித்து வழங்கப்பட்ட செயல்முறை விளக்கத்தையும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் திரையிடப்பட்ட கொரோனா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தையும் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) மா.பிரதீப்குமார், ராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.பி.வெங்கடாசலம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.