முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. இடம் பெறுமா? வைத்திலிங்கம் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

தஞ்சாவூர் : தஞ்சையில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு குறித்து தமிழக கவர்னரிடம் ஒப்புதல் பெறுவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கிறோம்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உணவுத்துறை அமைச்சர் ஆய்வு செய்து, ஆயிரம் மூட்டைகளுக்கு அதிகமாக எடுக்கப்படும் மையங்களில் கூடுதலாக ஒரு மையம் தொடங்கப்படும் என அறிவித்து இருக்கிறார்.

விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் செய்வதை துரிதப்படுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து கொண்டு இருக்கிறது. 

நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வாங்கப்படுவதாக அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்று கேள்வி கேட்கக்கூடாது. அப்படி யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருக்கிறார். 

மத்திய மந்திரி சபையில் இடம் பெற வேண்டும் என்ற கருத்து குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதுபோன்ற எண்ணம் எனக்கு கிடையாது. மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து