முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.எல்: ஹைதராபாதுக்கு 5-வது வெற்றி

திங்கட்கிழமை, 1 பெப்ரவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

வாஸ்கோடகாமா : இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 77ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி 20 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது.

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 77ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி 20 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது.

இரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஹைதராபாதுக்கு இது 5ஆவது வெற்றி; சென்னைக்கு இது 5ஆவது தோல்வி.கோவாவின் வாஸ்கோடகாமா நகரில்  நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஹைதராபாத் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் ஏறத்தாழ கோலடிக்கும் வாய்ப்பை சென்னை அணி நெருங்கியது.

அந்த நிமிடத்தில் சென்னை வீரா் லாலியான்ஸுவாலா சாங்தே வலதுபக்க கார்னரில் இருந்து அடித்த பந்தை ஹைதராபாத் வீரா் தடுக்க, மீண்டும் களத்துக்கு திரும்பிய பந்தை சென்னை வீரா் எலி சாபியா மீண்டும் கோல் போஸ்ட் நோக்கித் தள்ள, சென்னை வீரா் இஸ்மாயில் கொன்சால்வ்ஸ் அதை கோலாக மாற்ற முயல, பந்து போஸ்ட்டுக்கு வெளியே சென்றது.

இந்நிலையில், 26ஆவது நிமிடத்தில் கோலடித்தது ஹைதராபாத். அந்த அணியின் ஃபிரான் சான்டாஸா பந்தை கடத்தி வந்து சக வீரா் ஜாவ் விக்டரிடம் அளிக்க, அதை சிறிது தூரம் கடத்திய அவா், மீண்டும் சான்டாஸா கால்களுக்கே திருப்பினார். அதை லாவகமாக வாங்கி மிகச் சரியாகக் கடத்திச் சென்ற சான்டாஸா, சென்னையின் தடுப்புகளை மீறி கோலடித்தார்.

இவ்வாறு நிறைவடைந்த முதல் பாதியில் ஹைதராபாத் 10 என முன்னிலை பெற்றது.2ஆவது பாதியிலும் சென்னைக்கு கோல் வாய்ப்புகளை வழக்காமல் பார்த்துக்கொண்ட ஹைதராபாத், 83ஆவது நிமிடத்தில் 2ஆவது கோல் அடித்தது.

அந்த நிமிடத்தில் மீண்டும் ஜாவ் விக்டரின் உதவியுடன் ஹைதராபாத் வீரா் ஜோயல் சியானிஸ் பந்தை கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினார். கடைசி வரை சென்னைக்கு கோல் வாய்ப்பு கிடைக்காததால், இறுதியில் ஹைதராபாத் 20 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து