முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே. வங்கத்தை அராஜக பூமியாக மாற்றிய திரிணாமுல் குண்டர்கள் : உ.பி. முதல்வர் யோகி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 3 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் அராஜக பூமியாக மாற்றியுள்ளனர் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 6 தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல்  6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.  அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மேற்குவங்காள தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ.க. மூத்த தலைவரும், உத்தரபிரதேச முதல்வருமான யோகி ஆதித்யநாத் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அம்மாநிலத்தின் ஹவ்ரா மாவட்டத்தில் நடந்த பிரச்சாரத்தில் உ.பி. முதல்வர் பேசியதாவது, 

மேற்குவங்காளம் நாட்டின் கலாச்சார தேசியவாதத்தின் பூமியாக இருந்து வந்தது. ஆனால், மேற்குவங்காளத்தை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் ரவுடிசம் மற்றும் அராஜக பூமியாக மாற்றியுள்ளனர்.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் சூழ்நிலையை மாற்றி அவர்களின் திருப்திக்காக இந்த பூமியை பலியாக்கி விட்டனர். மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்று களநிலவர போக்குகள் காட்டுகின்றன என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து