முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம்: 35 மாவட்டங்களில் ரூ. 100-ஐ தாண்டியது பெட்ரோல் விலை : லாரி, ஆட்டோ, டாக்சி கட்டணங்களும் உயரும் அபாயம்

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் கச்சா எண்ணெயின் விலை (ஒரு பேரல்) ரூ.2,800ஆக இருந்தது. இது தற்போது பல மடங்கு உயர்ந்து ரூ.5,021ஆக அதிகரித்துள்ளது.  அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளும் பெட்ரோல்- டீசல் மீது வரியை விதிக்கின்றன. இந்த 2 காரணங்களாலும் பெட்ரோல்- டீசல் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து இருக்கிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பே 100-ஐ கடந்து இருந்தது. இந்த நிலையில் தமிழகத்திலும் தற்போது சென்னை, திருவள்ளூர், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களை தவிர 35 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை 100-ஐ தாண்டி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்று  ரூ.99.53-க்கு விற்பனையானது. திருவள்ளூரில் இதன் விலை ரூ.99.81ஆக இருந்தது. திருச்சியில் பெட்ரோல் விலை ரூ. 99.94ஆகவும்  இந்த 3 மாவட்டங்களிலும் அடுத்த சில தினங்களில் பெட்ரோல் விலை 100-ஐ தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.  நேற்று பெட்ரோல் விலை 100-ஐ கடந்துள்ள 34 மாவட்டங்கள் மற்றும் விலை நிலவரம் வருமாறு:-

அரியலூர்-100.13,  கோவை-102.83,   கடலூர்-101.43,   தர்மபுரி-100.68,  திண்டுக்கல்-100.39, ஈரோடு-100.08, கள்ளக்குறிச்சி-101.44, காஞ்சிபுரம்-100.21, கன்னியாகுமரி-100.13, கரூர்-100.07, கிருஷ்ணகிரி-100, மதுரை-100.06, நாகப்பட்டினம்-100.22, நாமக்கல்-100.20, நீலகிரி-101.47, பெரம்பலூர்-100.04, புதுக்கோட்டை-100.04,  ராமநாதபுரம்-100.08, ராணிப்பேட்டை-100.50,  சேலம்-100.33, சிவகங்கை-100.59, தென்காசி-100.20,  தஞ்சாவூர்-100, தேனி-100.64, திருப்பத்தூர்-101.46, திருவண்ணாமலை- 100.80,  திருவாரூர்-100, தூத்துக்குடி-100.22, திருப்பூர்-100.09, வேலூர்-100.37, விழுப்புரம்-101.05, விருதுநகர்-100.84, மயிலாடுதுறை-100, செங்கல்பட்டு-100, நெல்லை-100.11

பெட்ரோல் விலையுடன் டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. டீசல் விலையும் பல்வேறு மாவட்டங்களில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.95 அளவுக்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக லாரி, ஆட்டோ, வாடகை கார் கட்டணங்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.  இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களில் பலர் பயணத்திற்கு ஏதுவாக பெரும்பாலும் இருசக்கர வாகனங்களையே நம்பியுள்ளனர்.  பெட்ரோல் விலை காரணமாக பலர் மோட்டார் சைக்கிள்களை ஓரம் கட்டி விட்டு பஸ், ரயில்களில் பயணம் செய்வதும் அதிகரித்துள்ளது.

மேலும் இன்று முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பலர் அதில் பயணம் செய்து வேலைகளுக்கு செல்வதற்கும் ஆர்வமாக உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி, ஆட்டோ, டாக்சி கட்டணங்களும் உயர வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாது, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து