முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழா: முதல் முறையாக பாகிஸ்தான் செல்கிறார் கேப்டன் ரோகித்?

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      விளையாட்டு
India 2024-05-11

Source: provided

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவில் பங்கேற்க  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாகிஸ்தான் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அடுத்த மாதம்...

சாம்பியன்ஸ் டிராபி வருகிற பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடக்க இருக்கிறது. இதன்மூலம் 1996 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் அணி ஐ.சி.சி. போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல இந்திய அணி மறுத்ததால், இந்தியாவுக்கானப் போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபாயில் விளையாடுகிறது.

முதல் முறையாக...

இருப்பினும், தொடக்க விழாவில் பங்கேற்கும் மெகா நிகழ்வுக்கு முன்னதாக ரோஹித் சர்மா தனது வாழ்க்கையில் முதல் முறையாக பாகிஸ்தானுக்குச் செல்லவிருப்பதாக பி.சி.சி.ஐ.யின் நம்பத் தகுந்த வட்டாங்கள் தெரிவித்துள்ளன. 2007 ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான ரோஹித் சர்மா இதுவரை பாகிஸ்தானுக்கு பயணம் செய்ததில்லை. ரோஹித் சர்மா பாகிஸ்தானுக்கு செல்வாரா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி அறிவிக்கப்பட்ட பிறகுதான் அவர்கள் இந்த விஷயம் குறித்து தெரிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரமாண்ட நிகழ்ச்சி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க விழாவிற்கு ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 16 அல்லது 17 ஆம் தேதியன்று நடைபெறும் இந்த நிகழ்வில் அனைத்து அணிகளின் கேப்டன்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து