முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பார்வை அற்றவர்களுக்காக விரைவில் செயற்கையாக தயாரான ரோபோ கண்கள்

Image Unavailable

இன்றைக்கு அனைத்து துறைகளிலும் ரோபோடிக்ஸ் இல்லாத இடமே இல்லை என்று சொல்லிவிடலாம்.. பார்வையற்றோரின் பார்வையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த தொழில்நுட்பம் விரைவில் நிஜமாக போகிறது. ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (HKUST) ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்தில் ஒரு மனித, குழிவான விழித்திரையை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்மாதிரி புரோஸ்டெடிக் கண்ணை உருவாக்கியுள்ளது, இது நானோஒயர்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை விழித்திரை சிலிகான் பாலிமரில் பொருத்தப்பட்டுள்ளது, இது நானோ கனெக்டர்களுக்கு இடையில் ஒரு இடையீடாக பங்கு வகிக்கிறது. இந்த செயற்கை விழித்திரை ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 0.3 மைக்ரோவாட் முதல் 50 மில்லி வாட் வரை பரந்த அளவிலான தீவிரங்களின் ஒளியைக் கண்டறிய முடியும். தற்போது சோதனை வடிவில் இருக்கும் இவற்றில் இன்னும் களையப்பட வேண்டிய ஏராளமான சிக்கல்கள் நிறைய உள்ளன. இருந்த போதிலும் விரைவில் அவை நிஜமாக்கப்படும் என நம்பலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்