முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பட்ஜெட் குறித்து தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் ஆலோசனை

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2022      வர்த்தகம்
Image Unavailable

தமிழக பட்ஜெட்  அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்,  பட்ஜெட் குறித்து தமிழக  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறுகுறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், அனைத்து துறை செயலாளர்களும் கலந்து கொண்டனர்.  இந்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. 

ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சாலை மற்றும் சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறு, குறு தொழில்துறையினரின் கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார்.  அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அடிப்படையில், பட்ஜெட்டில் புதிய சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. மேலும், எங்கெல்லாம் புதிய தொழில் நிறுவனங்கள் அமைய உள்ளன மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகும்.

 

கொரோனா காலகட்டத்தில் சிறு நிறுவனங்கள், பெரிய இழப்பை சந்தித்தன. அதிலிருந்து அந்நிறுவனங்கள் மீண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,  இன்னும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்து கேட்கப்பட்டு முதல்வரின் ஆலோசனைக்கு கொண்டு செல்லப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து