முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்: கமல்நாத் திட்டவட்டம்

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 25- காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர், துணைத் தலைவர் ராகுல்காந்திதான் என்று மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட ராகுல் காந்தி நேற்று முன்தினம் தமது பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், 

இன்றைய அரசியல் சூழ்நிலை, விவாதங்கள் அனைத்துமே கசப்புணர்வை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. நாம் நமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். எதிர்மறை அரசியலில் ்ஈடுபட எனக்கு விருப்பம் இல்லை. ஒவ்வொருவராலும் விமர்சிக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை என்றார். 

பின்னர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அமைச்சர் கமல்நாத், என்னைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவருமே ராகுல் காந்தியைத்தான் பிரதமர் வேட்பாளராகப் பார்க்கின்றனர். வேறு யாரையும் பிரதமர் வேட்பாளராகப் பார்க்கவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago