முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப் ஆண்டவர் பதவி விலகுகிறார்

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

வாடிகன்,பிப்.12 - போப் ஆண்டவர் பென்டிக் 16 பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். கடந்த 600 ஆண்டுகளில் இடையிலேயே பதவி விலகும் முதல் போப் ஆண்டவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

போப் ஆண்டவர்தான் கத்தோலிக்க கிறிஸ்த மதத்தின் உயர்ந்த பதவியாகும். தற்போது போப் ஆண்டவராக இருக்கும் இவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். இவர் கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி தலைமை பீடமான வாடிகனில் போப் ஆண்டவராக பதவி ஏற்றார். அப்போது அவருக்கு பெனடிக் 16 என்று பெயர் சூட்டப்பட்டது. 85 வயதாகும் போப் ஆண்டவருக்கு உடல் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இறைபணியை சரிவர செய்ய முடியவில்லை என்றும் கடவுள் முன்பு எனது மனசாட்சியை வைத்து பார்த்ததில் போப் ஆண்டவராக நீடிக்க தாம் விரும்பவில்லை என்று போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார். இவர் வரும் 28-ம் தேதியில் இருந்து பதவி விலகலாம் என்று தெரிகிறது. இதனையொட்டி புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்க நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்