முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவராத்திரியை கொண்டாட இந்திய இந்துக்கள்வர பாகிஸ்தான் அனுமதி

சனிக்கிழமை, 9 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

லாகூர்,மார்ச்.- 9 - பாகிஸ்தானில் சிவராத்திரி விழாவை கொண்டாட இந்தியாவில் இருந்து இந்துக்கள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி இந்துக்களின் முக்கிய புனித விழாவாகும். அன்றைய தினம் அனைத்து மக்களும் தங்களுடைய குலதெய்வங்களை வழிபடுவார்கள். இதற்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் வசிக்கும் இந்துக்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குலதெய்வங்களிைன் கோயில் இருக்கும் இடங்களுக்கு சென்று வழிபடுவார்கள். பாகிஸ்தானில் மிகவும் குறைந்த அளவில் இன்னும் இந்துக்கள் இருக்கிறார்கள். இஸ்லாமாபாத்திற்கு அருகே வரலாற்று சிறப்புமிக்க கடாஸ் ராஜ் கோயில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு செல்ல வாஹா வழியாக பாகிஸ்தான் செல்ல வேண்டும். இதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.  பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகே சாஹ்வால் மாவட்டத்தில் இந்த கோயில் இருக்கிறது. சிவராத்திரியையொட்டி இந்த கோயிலில் நடக்கும் வழிபாட்டில் கலந்துகொள்வதற்காக வாஹா எல்லை வழியாக இந்தியாவில் இருந்து இந்துக்கள் செல்கிறார்கள். நாளை பாகிஸ்தான் செல்லும் அவர்களை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் எல்லைப்பகுதியான வாஹா எல்லையில் கோயில் அறக்கட்டளை வாரிய நிர்வாகிகள் வரவேற்கிறார்கள். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் இந்துக்கள் வழிபாடு செய்துவிட்டு பத்திரமாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை வாரிய நிர்வாகிகள்தான் செய்திருக்கிறார்கள். சக்வால் நகரில் அவர்கள் இரண்டு நாட்கள் தங்கி நாளை அவர்கள் வழிபாடு செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்துக்கள் பத்திரமாக திரும்ப அவர்களுக்கு குண்டுதுளைக்காதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டிற்கு பின்னர் அவர்கள் நாளை மறுதினம் லாகூர் வருகிறார்கள் அங்கு கிருஷ்ணர் கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர். பின்னர் வரும் 13-ம் தேதி வாஹா எல்லை வழியாக இந்தியா திரும்புகிறார்கள்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்