முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய திரைப்பட விருதுகள்: தமிழில் 3 படங்களுக்கு விருதுகள்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.20 - திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த பிராந்திய மொழிப்படமாக பாலாஜி சக்தி வேல் இயக்கத்தில் லிங்குசாமி தயாரித்த வழக்கு எண் 18/9 படம் தேர்வு செய்யப்பட்டது. இதே படத்தில் சிறந்த ஒப்பனைக்காக ராஜாவுக்கு கிடைத்தது. சிறந்த ஆடை வடிவமைப்புக்கு பரதேசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதை பூர்ணிமா ராமசாமி பெற்றார். விஸ்வரூபம் படத்தில் சிறந்த நாட்டியத்திற்கான பரிசை பர்ஜு மகராஜ் , கலை வடிவத்திற்காக லால்குடி இளையராஜாவுக்கும் கிடைத்துள்ளது. 

சிறந்த படங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருது வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எந்திரன், ஆடுகளம் ஆகிய படங்கள் 14 விருதுகளை பெற்று தமிழ் சினிமா சாதனை படைத்தது. ஆனால் இந்த ஆண்டு 5 விருதுகள் மட்டுமே தமிழுக்கு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மலையாள படங்கள் 14 விருதுகளை தட்டி சாதித்துளளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 60 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த படமாகபான்சிங் தோமர் எநற இந்திப்படம் தேர்வாகியுள்ளது.சிறந்த நடிகராக பான்சிங்தோமர் பட நாயகன் இர்பான்கான் பெறுகிறார். சிறந்த நடிகை தக் மராத்தி படத்தில் நடித்த உஷா ஜைதவு பெறுகிறார்.

இந்த விருதுகள் மே 3-ம் தேதி டெல்லியில் வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்