முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமாணவி பாலியல்வழக்கு: செய்திசேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி

சனிக்கிழமை, 23 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

டெல்லி: மார்ச் - 24 - டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை குறித்த தகவல்களை சேகரிக்க ஊடகங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் ஒடும் பேருந்தில் இரவு நேரத்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்து மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த நிகழ்வு, இளம் பெண்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பத்து நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் அந்த மாணவி மரணமடைந்தார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், விசாரணை நிலவரங்கள் பற்றி செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக செய்திகள் வெளியிடப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்த செய்தி சேகரிக்க அனுமதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கும் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும் அன்றாட விசாரணை விவரங்களை சேகரிக்க ஊடகங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்