முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பகுதிக்குள் ஊடுருவும் சீன அணு நீர்மூழ்கிக் கப்பல்கள்

திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.9 - இந்திய கடல் பகுதிக்குள், இந்தியப் பெருங்கடலுக்குள் அடிக்கடி சீனாவின் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் ஊடுறுவுவதாக செய்திகள் கூறுகின்றன. இதை இந்தியக் கடற்படையும் உறுதி செய்துள்ளது. இதுவரை 22 முறை சீனாவின் அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் ஊடுறுவியதாக இந்திய கடற்படைத் தரப்பில் கூறப்படுகிறது. கடைசியாக பிப்ரவரி மாதம் சீனா ஊடுறுவியுள்ளது. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஊடுறுவியது பதிவாகியுள்ளது.

இந்த அணு நீர்மூழ்கிக்க ப்பல்களின் ஊடுறுவல் குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இந்திய கடற்படை அறிக்கை அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் சோனார் கருவியின் உதவியுடன் இந்திய கடற்படை இந்த ஊடுறுவல்களைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தியாவைத் தவிர்த்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் புழக்கத்தில் உள்ள கடற்படை சீனா மட்டுமே. இதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. இந்தியப் பெருங்கடலுக்குள், சீனா நீர்மூழ்கிக் கப்பல்கள் ஊடுறுவியபோது எந்தவிதமான எதிர்ப்பையும் அவை சந்திக்கவில்லையாம். ஆனால் இது இந்தியக் கடற்படைக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் கிட்டத்தட்ட இந்தியக் கடலுக்குள் 90 கிலோமீட்டர் தூரம் வரை சீன நீர்மூழ்கிக் கப்பல் ஊடுறுவியதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்