முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் விபத்து: அதிபர் அகமதிநெஜத் உயிர்தப்பினார்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

டெஹ்ரான்,ஜூன்.3 - ஈரானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் மெஹ்மவுத் அகமதிநெஜத் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார்.  ஈரானின் வடகிழக்கு பகுதி மலைபாங்கானதாகும். இந்த பகுதியில் ஒரு திட்ட துவக்க விழாவுக்காக அதிபர் அகமதிநெஜத்தும் அதிகாரிகளும் ஹெலிகாப்டரில் சென்றனர். ஹெலிகாப்டர் சென்று கொண்டியிருந்தபோது பழுதடைந்ததாக தெரிகிறது. இருந்தபோதிலும் பைலட் திறமையாக ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்கிவிட்டார். இதனால் ஹெலிகாப்டரில் இருந்த அதிபர் அகமதிநெஜத் மற்றும் அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இல்லாமல் உயிர்தப்பினர். கடவுள் அருளால் அதிபர் அகமதிநெஜத்தும் அதிகாரிகளும் உயிர்தப்பினர். திட்டமிட்டபடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திட்டத்தை துவக்கிவைத்துவிட்டு காரில் டெஹ்ரானுக்கு அகமதிநெஜத் பத்திரமாக திரும்பினார் என்று ஈரானில் செயல்படும் ஒரு இணையதளம் தெரிவித்துள்ளது. ஆனால் விபத்து விபரம் குறித்து அந்த இணையதளம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஈரான் இஸ்லாம் குடியரசு அதிபராக அகமதிநெஜத் இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்டு மாதம் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் 14-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் 8 பேர் போட்டியிடலாம் என்று தெரிகிறது. அதிபர் தேர்தலில் தமக்கு ஆதரவான ஒருவர் வெற்றிபெற அமெரிக்கா மறைமுகமாக திட்டங்களை வகுத்து செயல்படலாம் என்று தெரிகிறது. தற்போது அமெரிக்காவும் ஈரானும் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago