முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடர்: 6 ஆஸி., வீரர்களுக்கு ஓய்வு

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      விளையாட்டு
India-Australia 2023-11-22

Source: provided

சிட்னி : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில்  எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து 6 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னிலையில்... 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

பெரிய மாற்றம்...

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜாம்பா, கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஸ் இங்லிஸ் மற்றும் சீன் அபோட் ஆகிய வீரர்களுக்கு பணிச்சுமை காரணமாக இத்தொடரின் எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இவர்களுக்கு பதிலாக பென் மெக்டர்மோட், ஜோஷ் பிலிப், கிறிஸ் கிரீன் மற்றும் பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் எஞ்சிய 3 போட்டிகளில் விளையாடுவர் என அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து