முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் மழையால் தமிழகத்தில் 1,500 ஏரிகள் முழுமையாக நிரம்பின

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      தமிழகம்
Chembarambakkam 2023 06 20

Source: provided

சென்னை : தமிழகத்தில் மொத்தமுள்ள 14,139 ஏரிகளில் 1,500 ஏரிகள் 100 சதவீதம் முழுமையாக நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இன்னும் பெய்யவில்லை. அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 44 செ.மீ. அளவுக்கு மழை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 35 செ.மீ. அளவுக்குத்தான் மழை பெய்துள்ளது. அதாவது 6 சதவீதம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஏரி, குளங்கள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை.

தமிழகத்தில் மொத்தம் 14,139 ஏரிகள் உள்ளன. இவற்றில் 1,500 ஏரிகள் மட்டும்தான் 100 சதவீதம் முழுமையாக நிரம்பி உள்ளன. 2 ஆயிரம் ஏரிகள் 75 சதவீதம் அளவுக்குதான் நிரம்பி இருக்கின்றன. இதுதவிர 2 ஆயிரம் ஏரிகள் 50 சதவீதமும், 3 ஆயிரம் ஏரிகள் 25 சதவீதமும் நிரப்பி உள்ளன.

கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்த காரணத்தால் இந்த மாவட்டங்களில் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. ஆனால் வட மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யாததால் இன்னும் ஏரிகள் நிரம்பாமல்தான் உள்ளன.

இந்த மாதம் (டிசம்பர்) மழை காலம் என்பதால் இந்த மாதத்தில் ஓரளவு மழை பெய்தால் ஏரிகள் இன்னும் நிரம்ப வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து