முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.4,634 கோடி மதிப்பில் புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      இந்தியா
0

Source: provided

புதுச்சேரி:புதுச்சேரி சட்டப்பேரவையில் 5 மாத செலவுக்கான ரூ.4634 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததால் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க.,  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  யூனியன் பிரதேசமான புதுச்சேரி பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.  இந்நிலையில் புதுச்சேரி அரசின் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை.

இந்த நிலையில் அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று (பிப்.22) தாக்கல் செய்தார்.  ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5 மாத அரசு செலவினங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி,  அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர்  செல்வம் அறிவித்தார்.

இந்த நிலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததை கண்டித்து எதிர்க்கட்சிகளான தி.மு.க.,  காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  காலை 9.45 மணிக்கு தொடங்கிய சட்டசபை கூட்டம் 10.45 மணிக்கு முடிவடைந்தது.  இதையடுத்து சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து