Idhayam Matrimony

காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் எம்.எல்.ஏ. விஜயதாரணி : பிரதமர் மோடியின் கீழ் இந்தியா பெரும் வளர்ச்சியை கண்டுள்ளதாக பேட்டி

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2024      இந்தியா
Vijayadharani 2023-02-24

Source: provided

புதுடெல்லி : மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் டெல்லியில் நேற்று காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில்  இணைந்தார் விஜயதாரணி எம்.எல்.ஏ. இது குறித்து அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் கீழ் இந்தியா பெரும் வளர்ச்சியை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை என தேர்தல் களம் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி,  கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றும் காங்கிரஸ் தலைமை மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், பா.ஜ.கவில் இணையப் போவதாகவும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வந்தன. இதனை காங்கிரஸ் கட்சி மறுத்து வந்தது.

இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி எம்.எல்.ஏ. விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தார். 

விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தது துரதிர்ஷ்டவசமானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும் அவர், விஜயதாரணி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் சேர்ந்தது ஏன் என  எம்.எல்.ஏ. விஜயதாரணி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் டெல்லியில் அளித்த பேட்டியில், 

காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்ததில் மகிழ்ச்சி. மிகப் பெரிய தலைவர் பிரதமர் மோடியின் கீழ் இந்தியா பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. பா.ஜ.க.வை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியில் இணைந்துள்ளேன். பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கபடுகிறது. பிரதமர் மோடியின் சேவை நாட்டிற்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து