முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயிலாடுதுறை புதிய கலெக்டர் அலுவலகம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      தமிழகம்
CM-1-2024-03-04

மயிலை, மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தை திறந்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (மார்ச் 3) மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் விரைவு ரயிலில் புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு சீர்காழி சென்றடைந்தார். அவருக்கு ரயில் நிலையத்தில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 4) காலை 10 மணிக்கு புதியதாக கட்டி முடிக்கப்பட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தரைத்தளம் உள்ளிட்ட 7  மாடி கட்டிடமாக பிரம்மாண்டமாக ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.  முன்னதாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்டோர் பூங்கோத்து கொடுத்து வரவேற்றனர்.

முதல்வருடன் அமைச்சர்கள் மெய்யநாதன்,  எ.வ.வேலு,  ரகுபதி,  டி.ஆர்.பி.ராஜா, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,  அன்பில் மகேஸ் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து