முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பேச, வாக்களிக்க எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே : சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற அவையில் வாக்களிக்க மற்றும் பேசுவதற்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் வாங்குவது குற்றம். லஞ்சம் வாங்கும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தண்டனைக்குரியவர்கள் என சுப்ரீம் கோர்ட் தீர்பளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

ஆட்சியை கவிழ்க்க...

1993-ல் மத்தியில் பிவி நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த ஆட்சியை கவிழ்க்கும் வகையில் கூட்டணியில் இருந்துகொண்டே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்கள் மாற்று கட்சிக்கு வாக்களித்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த 1998ல் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருந்தது. அந்த தீர்ப்பை 25 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றும் வகையில் தற்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ்,  சஞ்சய் குமார்,  பி.எஸ்.நரசிம்ஹா, ஜெ.பி.பார்திவாலா,  மனோஜ் மிஸ்ரா ஆகிய 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது.

விலக்கு கோர முடியாது...

அப்போது, 1998-ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டப்பேரவை, பாராளுமன்றத்தில் லஞ்சம் வாங்கும் உறுப்பினர்கள் விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது. சட்டப்பேரவை, பாராளுமன்றத்தில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது, பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும். எனவே, 1998ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.

அனுமதிக்க முடியாது...

லஞ்சம் வாங்குவது என்பது பாராளுமன்ற சிறப்பு உரிமைகளால் பாதுகாக்கப்பட்டது அல்ல. பாராளுமன்ற சலுகையை பயன்படுத்தி எம்.பி லஞ்சம் வாங்கி சட்ட பாதுகாப்பை பெறுவதை அனுமதிக்க முடியாது. எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் வாங்கினாலும் குற்றமே. லஞ்சம் வாங்குவது என்பது எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் தனிப்பட்ட குற்றம். மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க லஞ்சம் பெறும் எம்.எல்.ஏ.க்கள் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்

நன்னடத்தையை...

அரசியலமைப்பின் பிரிவு 105 (2) அல்லது 194 இன் கீழ்,  உறுப்பினர் லஞ்சம் வழங்கிய பின் அவர் மீதான நடவடிக்கைக்கு எதிராக பாதுகாக்க வழி வகை செய்யவில்லை. லஞ்சம் பொது வாழ்வில் நன்னடத்தையை அழிக்கிறது. லஞ்சம் என்பது ஒரு மிகப்பெரிய குற்றம். ஏற்கனவே, கடந்த 1998 ஆம் ஆண்டு பி.வி நரசிம்மராவ் வழக்கில் அளிக்கப்பட்ட சட்டப்பாதுகாப்பை ரத்து செய்கிறோம்.  இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வரவேற்பு

தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று பாராட்டி உள்ளார். "சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு தூய்மையான அரசியலை உறுதி செய்வதுடன், அரசியலமைப்பின் மீது மக்களிடையே ஆழ்ந்த நம்பிக்கையை ஏற்படுத்தும்" என்று பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து