எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில் நேற்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற வேண்டி உள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் கடுமையான வெப்பம் தாக்குகிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அசாதாரண சூழ்நிலையில் இருப்பதால் தேர்தல் ஆணையம் நேற்று டெல்லியில் அவசரமாக கூடி ஆலோசித்தது.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடுமையான வெப்பம் தாக்கும் என்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்று அதிகாரிகள் விவாதித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோரும் கலந்து கொண்டனர் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |