முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      தமிழகம்
eps

சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். 

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

சென்னை மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் தொகுதி பொறுப்பாளர்களுடனும் ஆலோசனை நடத்தினார். நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. உடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. போட்டியிட்டது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக சென்னை மற்றும் புறநகரை சேர்ந்த 9 மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், இதுதவிர ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை தொகுதிகளின் வேட்பாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தேர்தல் பணிகளில் ஏற்பட்ட பிரச்சினைகள், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது, வெற்றிவாய்ப்பு எப்படி என்பது தொடர்பாக அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இன்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், இன்று சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என்றும் ஆலோசனை நடத்தப்படும் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து