முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      தமிழகம்
Rain 2023-08-17

Source: provided

சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

மே 18-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும். மேலும் இன்று திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி (மலைப் பகுதிகள்), குமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், அடுத்த 5 நாள்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36  முதல் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் 

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஆகவே கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து