முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு: ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் நிறைவு பெற்றது

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      ஆன்மிகம்
Palani 2024-06-30

Source: provided

சென்னை : பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் முத்தமிழ் மாநாடு நடைபெறுவதையொட்டி ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. 

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ்பெற்ற முருகன் கோவில்களின் கண்காட்சி அரங்கு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் என முருகப்பெருமானின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு அமைக்கப்படுவதோடு, சமய பெரியோர்களின் உரைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. 

இந்த மாநாட்டில் பங்கேற்கவும், மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https: muthamizhmuruganmaanadu 2024.com என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, பதிவுகள் நடந்து வருகின்றன. 

மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் ஜூன் 15-ம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள், ஆய்வு மாணவர்கள் ஜூன் 20-ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன் பின்னர், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று பலர் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து