முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் ஆக.14 வரை 55 மின்சார ரயில்கள் ரத்து : தெற்கு ரெயில்வே அறிவிப்பு

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      தமிழகம்
Tairn 2023-05-25

Source: provided

சென்னை : தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, இன்று (ஜூலை 23, 2024) முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.

அதிகாலை முதல் காலை 09:20 மணி வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும். மதியம் 01:00 மணியிலிருந்து இரவு 10:20 வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும். ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களுக்கு பதிலாக இயக்கப்படும் சிறப்பு மின்சார ரயில்களின் கால அட்டவணை. பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக, பல்லாவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு மாநில போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரயில்களின் ரத்து குறித்த விவரங்களை ரயில் நிலைய அறிவிப்பு (Station Announcement) / அறிவிப்பு பலகைகள் மூலமாகவும், மேலும் செய்தித்தாள்கள். டிவி சேனல்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பயணிகள் தெரிந்துகொள்ளலாம். மேலும், சென்னை எழும்பூர், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் உதவி மையம் (Passenger Help Desk) ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரும் / டிக்கெட் பரிசோதகர்களும் பயணிகளின் உதவிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் செங்கல்பட்டிலும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் இயக்கப்பட உள்ளது.

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த பராமரிப்புப் பணி நடைபெறுவதன் காரணமாக பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்றவாறு திட்டமிடும்படி தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது. பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து