முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் விடுமுறை: ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      தமிழகம்
Omni-Bus

Source: provided

சென்னை : ஓணம் மற்றும் வார இறுதி நாளை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.  

தமிழகத்தில் மட்டும் 3,000-க்கும் அதிகமான தனியார் ஆம்னி பேருந்துகள் உள்ளன. இந்த ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பண்டிகை நாள்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன.

பண்டிகை நாள்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாள்களாக இருந்தாலும், வார இறுதி நாள்களிலும் இது போன்ற கட்டண உயர்வு தொடர்கதையாகவே இருக்கிறது. அரசு பேருந்துகளிலும் டிக்கெட் கிடைக்காதவர்கள் மற்றும் கடைசி நேரத்தில் பயணத்தை முடிவு செய்பவர்களின் ஒரே வாய்ப்பு தனியார் ஆம்னி பேருந்துகள்தான்.

இந்நிலையில் ஓணம் மற்றும் வார இறுதி நாளை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு குறைந்தபட்சம் ரூ.1,900 முதல் அதிகபட்சம் ரூ.4,000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கோவை செல்ல குறைந்தபட்சம் ரூ. 2000 முதல் அதிகபட்சம் ரூ. 4,500 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இருந்து நெல்லை செல்ல குறைந்தபட்சம் ரூ. 2000 முதல் அதிகபட்சம் ரூ. 4,200 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல ரூ. 2,500 முதல் ரூ. 4,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ. 2000 முதல் ரூ. 4000 வரை உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து