எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.7,425 கோடி நிதியை மத்திய அரசு உடனே வழங்கிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொலைநோக்கு பார்வையோடு சென்னையின் எதிர்கால போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இத்திட்டத்தின் 2 ஆம் வழித்தடத்துக்கு ஏப்ரல் 2017-இல் தமிழ்நாடு அரசால் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
நாட்டில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமாக 3 வழித்தடங்களுடன் 119 கி.மீ. நீளத்திலான மெட்ரோ ரயில் திட்டம் குறித்த ஒரு விரிவான திட்ட அறிக்கையினை மாநில மற்றும் மத்திய அரசின் 50:50 என்ற சமபங்களிப்பு அடிப்படையில் இரு தரப்பு மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி பெறுவதற்காக ஜனவரி 2019-ல் பரிந்துரை செய்யப்பட்டது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான செலவு மதிப்பீடுகளின் அளவுகோலுக்கான அறிக்கையின் அடிப்படையில் அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் வழித்தடத்தின் திட்ட மதிப்பீடு ரூ.63,246 கோடியாக மதிப்பிடப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் வழித்தடத்தை மாநிலத்துறை திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்த சரியான விவரத்தை அவருக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
2017-ம் ஆண்டு இத்திட்டத்தை ஒரு மத்திய துறை திட்டமாகவே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ஜப்பான் நாட்டின் நிதி வழங்கும் ஜேஐசிஏ நிறுவனம் 2018-ஆம் ஆண்டு இந்த திட்டத்தினை விரைந்து தொடங்க கடன் ஒப்பந்தத்தை உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட திட்ட அறிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் இருந்ததால், கடன் ஒப்பந்தத்தை குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் இறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில், இத்திட்டத்தினை மத்திய அரசின் மத்திய துறை திட்டம் எனும் ஒப்புதலை எதிர்நோக்கி, காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கிலும் பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு அரசே மாபெரும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.
இந்த வழிமுறையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இத்திட்டம் மத்திய அரசின் 17.8.2021 அன்று நடைபெற்ற பொது முதலீட்டு குழுவின் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இத்திட்டம் மத்திய துறை திட்டமாக செயல்படுத்த மத்திய அமைச்சரவைக்கு முன்மொழிந்தது என்பதை மத்திய நிதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.
மத்திய நிதி அமைச்சரை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம் மத்திய அரசின் பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்தபடி சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் வழித்தட திட்டத்தினை, மத்திய துறை திட்டமாக அங்கீகரித்து மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடியினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதேயாகும். ஒரு ரூபாய் கூட இதுவரை விடுவிக்கப்படவில்லை மேலும் மத்திய நிதி அமைச்சர் ரூ.21,000 கோடி வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடன்களாக ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ள போதிலும் தமிழ்நாடு அரசு ரூ.5,880 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உண்மையில் இதுவரை இந்த திட்டத்திற்காக ரூ.18,564 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு இதுவரை தனது சொந்த நிதியிலிருந்து செலவிட்டுள்ள தொகை ரூ.11,762 கோடியாகும். வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ.6,802 கோடியாகும். ஆனால் மத்திய அரசின் பங்கான பொது முதலீட்டுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடியில் ஒரு ரூபாய் கூட மத்திய அரசால் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
தமிழ்நாடு எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது என்பதை இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது மத்திய நிதி அமைச்சர் நாட்டில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து பேசும்போது கொச்சி, சென்னை, பெங்களூரூ, நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய 5 நகரங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
சென்னைக்கு எந்தவித நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை இந்த அறிவிப்புக்கு பின்பு பெங்களூருவுக்கு ரூ. 30,399 கோடி, கொச்சி நகரத்திற்கு ரூ.1957 கோடி, நாக்பூர் நகரத்திற்கு ரூ.6708 கோடி, பூணே நகரத்திற்கு ரூ. 910 கோடி, தாணே நகரத்திற்கு ரூ. 12,200 கோடி மதிப்பீடு கொண்ட திட்டங்களுக்கு மத்திய அரசு மத்திய துறை திட்டம் அடிப்படையிலேயே ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால் இதுவரை சென்னைக்கு எந்தவித நிதி ஒதுக்கீடும் மத்திய அரசு செய்யவில்லை.
மேலும், 2024-25 ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மகாராஷ்டிரா, புதுடெல்லி, குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கெல்லாம் உரிய நிதி மற்றும் சார்நிலைக்கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் இந்த நிதி ஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழ்நாடு மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுவது ஏன்? நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு ஏன் மேற்குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை? தமிழ்நாடு ஏன் மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுகிறது? அரசியல் காரணங்களுக்காக பொது மக்கள் பாதிக்கப்படும் வகையில் திட்டங்களை தொய்வுப்படுத்தவும், மாநில அரசிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்படுகிறதோ என்று நமக்கு ஐயம் ஏற்படுகிறது.
ரூ.7,425 கோடியை மத்திய அரசு வழங்கிட வேண்டும் எனவே, இந்த ஐயத்தை எல்லாம் போக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கைளை ஏற்றும் இந்த திட்டத்தினை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருவதை கருத்தில் கொண்டும் ஏற்கனவே பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளபடி தனது பங்கான ரூ.7,425 கோடியை மத்திய அரசு வழங்கிட வேண்டுமென்றும், இந்த திட்டத்தை மத்திய துறை திட்டமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசின் கடன் சுமையைக் குறைத்திட வழிவகை செய்திடவும், மத்திய நிதி அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025 -
திருவள்ளுவர் சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை: குறள் வழி நடந்து சமத்துவ சமுதாயம் பேணுவோம் என பதிவு
15 Jan 2025சென்னை, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க.
15 Jan 2025ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு சேகரித்தார்.
-
பாலமேடு ஜல்லிக்கட்டில் 19 மாடுபிடி வீரர்கள் காயம்
15 Jan 2025மதுரை, மதுரை பாலமேட்டில் 1,100 காளைகள், 910 வீரர்களுடன் விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 19 பேர் காயமடைந்தனர்.
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 10 அரசு விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்
15 Jan 2025சென்னை, திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2025-ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024--ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தல
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
15 Jan 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அணை நீர்வரத்து 381 கன அடியாக நீடிக்கிறது.
-
உங்களது ஆதரவுக்கு நன்றி: நடிகர் அஜித்குமார் உருக்கம்
15 Jan 2025துபாய், உங்களது ஆதரவு, வாழ்த்துகள் மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்
-
தேசிய ராணுவ தினம் கொண்டாட்டம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
15 Jan 2025புதுடெல்லி, தேசிய ராணுவ தினம் கொண்டாடப்பட்டதையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
ரஷ்யா ஏவுகணை தாக்குலை தடுக்க மின்சாரத்தை துண்டித்தது உக்ரைன்
15 Jan 2025கீவ், ரஷ்யா அதிரடி தாக்குதலில் இருந்து தப்பிக்க பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக உக்ரைன் மின்சாரத்தை துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
-
உலகம் முழுதும் எதிரொலிக்கும் திருக்குறளின் போதனைகள்: திருவள்ளுவர் தினத்தில் கவர்னர் புகழாரம்
15 Jan 2025சென்னை, திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி: நாட்டின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என பதிவு
15 Jan 2025மும்பை, இந்திய கப்பற்படைக்கு மேலும் வலுகூட்டும் வகையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ்.
-
மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் பணியில் எந்த சிக்கலும் இல்லை: தெற்கு ரயில்வே
15 Jan 2025சென்னை, மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணியில் எந்த சிக்கலும் இல்லை. எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
பூக்கும் புன்னகையில் மனம் நிறைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
15 Jan 2025சென்னை, முதல்வர் மு.க ஸ்டாலின் தனது வலைதள பதிவில், மாளவிகா ஐயர் என்பவரின் பதிவை பகிர்ந்து பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
-
இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க அனைத்து நாடுகளுக்கும் விரும்பம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்
15 Jan 2025மாட்ரிட், இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொள்ள அனைத்து நாடுகளும் விரும்புகின்றன என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பவர்களுக்கான வெகுமதி 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு: மத்திய அரசு புதிய அறிவிப்பு
15 Jan 2025புதுடெல்லி, இந்தியாவில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நல்ல உள்ளங்களுக்கு வெகுமதி தற்போது வழங்கப்படும் ரூ.5 ஆயிரத்தில் இ
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் உயிரிழப்பு
15 Jan 2025மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.
-
இனி ஒரு நாள் ஊதியம் ரூ.5000: கிராமிய கலைஞர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தார் முதல்வர்
15 Jan 2025சென்னை, சென்னை சங்கமம் விழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம், ரூ.5000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.
-
யு.ஜி.சி. நெட் தேர்வுக்கான மாற்று தேதிகள் அறிவிப்பு
15 Jan 2025புதுடெல்லி, பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வு நடைபெறும் மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காங். புதிய தலைமை அலுவலகம்: சோனியா காந்தி திறந்து வைத்தார்
15 Jan 2025டெல்லி, காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் ராகுல் காந்தி, சோனியா பங்கேற்றனர்.
-
சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை உயிரிழப்பு
15 Jan 2025திருச்சி, திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழக பா.ஜ.க. புதிய தலைவராக மீண்டும் அண்ணாமலைக்கு வாய்ப்பு? இந்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது
15 Jan 2025சென்னை, தமிழக பா.ஜ.க.
-
மேலும் 100 பள்ளிகளுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு: தமிழக அரசாணை வெளியீடு
15 Jan 2025சென்னை, தமிழ்நாட்டில் 2022-2023, 2023-2024-ம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு சுமார் ரூ.15 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்
-
வள்ளுவர் தினம்: கமல் புகழாரம்
15 Jan 2025சென்னை, அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
மோசமான வானிலை - அடர் மூடுபனி: டெல்லியில் 100 விமானங்கள், 26 ரெயில் சேவைகள் தாமதம்
15 Jan 2025டெல்லி, புது டெல்லியில் நேற்று காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் அடர்த்தியான மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரெயில்கள் தாமத மாகியுள்ளதா
-
குறள் நெறி காட்டும் பாதையில் அனைவரும் நடைபோடுவோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
15 Jan 2025சென்னை, மானுடம் தழைக்க குறள் நெறி காட்டும் பாதையில் நடைபோடுவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.