முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். முதல் பெண் நடுவர்

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      விளையாட்டு
Pak 2024-09-15

Source: provided

சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் முதல் பெண் நடுவராக சலீமா இம்தியாஸ் தேர்வாகியுள்ளார். இவர் இனிவரும் காலங்களில் சர்வதேச மகளிர் இருதரப்பு மற்றும் ஐ.சி.சி. தொடர்களில் நடுவராக செயல்படலாம். பாகிஸ்தானிலிருந்து முதல் பெண் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சலீமா இம்தியாசுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

________________________________________________________________

சென்னையில் வங்கதேச வீரர்கள்

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் கடந்த 12ம் தேதி சென்னை வந்தனர். அவர்கள் கடந்த 2 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேச அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தனர். டாக்காவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அனைவரும் விரைவில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.  

________________________________________________________________

இங்கி. அணிக்கு புதிய கேப்டன் 

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வெள்ளைப்பந்து (டி20 மற்றும் ஒருநாள்) அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் ஒருநாள் தொடரிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய கேப்டன் ஹாரி புரூக் தலைமையில் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு., ஹாரி புரூக் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ஆலி ஸ்டோன், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

________________________________________________________________

இந்திய வீரர் சாப்லே ஏமாற்றம்

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதி சுற்று போட்டி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் சாப்லே கலந்து கொண்டார்.

இருப்பினும் 8 நிமிடம் 17.09 வினாடிகளில் இலக்கை கடந்து 9-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தார். கென்யாவின் அமோஸ் சீரம் 8 நிமிடம் 06.90 வினாடியில் இலக்கை கடந்து முதலிடத்தையும், மொராக்கோவின் சோபியான் எல் பக்காலி (8 நிமிடம் 08.60 வினாடி) 2-வது இடத்தையும், துனிசியாவின் முகமது அமின்(8 நிமிடம் 09. 68 வினாடி) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து