முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆ. ஜெர்சியில் பெயர்கள்

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      விளையாட்டு
South-Africa 2024-10-04

Source: provided

டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா மகளிரணி தங்கள் அன்புக்குரியவர்களைக் கௌரவிக்கும் வகையில் சிறப்பு ஜெர்சிகளை உருவாக்கி உள்ளது. மகளிருக்கான 9-வது உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க மகளிரணியின் ஜெர்சியில் தங்களுக்கு பிரியமான நண்பர்கள் அல்லது உறவினர்கள் 5 பேரின் பெயர்களை பிரத்யேகமாகப் பதித்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அணியின் உள்ள ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மற்றும் தங்களுக்கு ஆதராவாக இருந்த 5 பேரின் பெயர்களை ஜெர்சியில் எம்பிராய்டரி செய்துகொள்ளலாம். அந்தப் பெயர்கள் ஜெர்சியின் காலர் பகுதியில் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

_______________________________________________________________________

அரையிறுயில் கோகோ காப்

சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் யூலியா ஸ்டாரோடுப்ட்சேவா உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 2-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த கோகோ காப், ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-2, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். 

இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் யூலியா ஸ்டாரோடுப்ட்சேவாவை வீழ்த்தி கோகோ காப் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் கோகோ காப், ஸ்பெயினின் பவுலா படோசா உடன் மோத உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து