முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சற்று குறைவு

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      தமிழகம்
gold 2023 01 26

Source: provided

சென்னை: தொடர்ந்து 2வது நாளாக நேற்று தங்கம் விலை குறைந்து விற்பனையானது

கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22-ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்து இருக்கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த 4-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.56,960-க்கு விற்பனையானது. இதையடுத்து நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து விற்பனையானது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று மேலும் குறைந்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.56,200-க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,025-க்கு விற்பனையானது.வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து