முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமரன் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024      சினிமா
Amran 2024-11-01

Source: provided

இந்திய ராணுவத்தில் சேவை செய்து உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் அமரன். பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளான இப்படத்தை கமல்ஹாசன் சோனி பிச்சருடன் இணைந்து தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். கதை - முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) தனது சிறு வயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறார்.

கல்லூரியில் இந்து ரெபேக்கா வர்கீஸை (சாய் பல்லவி) சந்திக்கும் முகுந்த் காதலில் விழுகிறார். காதல் ஒரு பக்கம் இருந்தாலும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்போடு பயிற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார். பல போராட்டங்களுக்கு பின் இரு வீட்டார் சம்மதத்துடன் முகுந்த் - இந்துவின் திருமணம் நடைபெறுகிறது. ராணுவத்தில் முதலில் லெப்டினன்ட்டாக சேரும் முகுந்த், பின் கேப்டன். அதனை தொடர்ந்து 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் சீட்டா கம்பெனியில் மேஜராக பொறுப்பேற்கிறார்.

அங்கு காஷ்மீர் எல்லைப் பகுதியில் அல்டாஃப் பாபா எனும் பயங்கரவாதியை  என்கவுண்டர் செய்கிறார் இந்த சம்பவத்திற்கு பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை. அமரன் படத்தை ராணுவ படமாக மட்டுமே காட்டாமல், முகுந்த் – இந்துவின் காதலையும் அழகாக வடிவமைத்துள்ளார் இயக்குநர். கமர்ஷியலுக்காக எதுவும் செய்யாமல், எதார்த்தமாக இப்படத்தை எடுத்ததற்கு இயக்குநருக்கு பாராட்டுகள்ள். கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் நெகிழ வைத்து விட்டது.

படத்தின் நிஜ ஹீரோ ஜிவி பிரகாஷ் தான். பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி பின்னி எடுத்துவிட்டார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவு மற்றும் Stefan Richter மாஸ்டர்ஸ் சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் சூப்பர். மொத்தத்தில் நாட்டுக்காக உயிர் தியாகம் ஒரு ராணுவ வீர்னின் வலி நிறைந்த உண்மைக் கதை. அனைவரும் பார்க்க வேண்டிய படம்..

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து