முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-ம் தேதி வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது: தமிழகத்தில் தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024      தமிழகம்
Puyal

Source: provided

சென்னை : 5-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பொழிவு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதாவது வழக்கத்தைவிட 123 சதவீதம் மழை பொழிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 

மேலடுக்கு சுழற்சி...

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது.,  தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இது நவம்பர் முதல்வார இறுதியில் (வரும் 5-ம் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக (புயல் சின்னம்) உருவாகவும் வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை தீவிரமடையும்... 

இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அந்த மாதங்களில் தமிழகத்தில் அதிக மழை பெய்யும். குறிப்பாக சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, தென் காசி, தூத்துக்குடி பகுதிகளில் அதிக மழை பெய்யும்.

பெய்யவில்லை.... 

இந்த வருடமும் இந்த எல்லா மாவட்டங்களிலும் அதிக மழை பெய்து வருகிறது. வட கிழக்கு பருவமழையோடு சென்னை சமீபத்தில் ஒரு புயலையும் சந்தித்தது. புயல் கரையை கடக்கும்போது மழை அதிக அளவு பெய்யும் என நினைத்து சென்னை வேளச்சேரி பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்திய சம்பவமும் நடந்தது. ஆனால், நல்லவேளையாக அதிக மழை பெய்யவில்லை. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்திருக்கிறது. எனவே, அரசு தரப்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. 

இயல்பை விட... 

இந்நிலையில், இந்த மாதம் (நவம்பர்) வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மொஹபத்ரா கூறியிருக்கிறார். அதிலும், இயல்பை விட அதிகமாக, குறிப்பாக இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அதாவது வழக்கமாக (100 சதவீதம்) பெய்வதைவிட 123 சதவீதம் அதிகாமாக பெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமாக வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து