எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மீண்டும் இடம் பிடித்துள்ளார். இதுகுறித்து தற்போது அவர் விளக்கமளித்துள்ளார்.
18-வது சீசன்...
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கும் காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்து விட்டன.
5 முறை சாம்பியன்...
இதில் அனைவரும் எதிர்பார்த்த 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. இதன்படி ஜஸ்பிரித் பும்ரா (ரூ.18 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ.16.35 கோடி), ரோஹித் சர்மா (ரூ.16.30 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி) ஆகியோரை அந்த அணி தக்க வைத்துள்ளது. முன்னதாக கடந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது ரசிகர்களிடையே அந்த அணி மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
மும்பை அணியில்...
அதன் காரணமாக நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மா மும்பை அணியில் விளையாட மாட்டார் என்று கடந்த பல மாதங்களாக பல்வேறு கருத்துகள் உலா வந்தன. ஆனால் நேற்று முன்தினம் மும்பை அணி வெளியிட்ட தங்களது அணி வீரர்களின் பட்டியலில் தக்க வைத்த ஐந்து வீரர்களில் ரோகித் சர்மாவும் இடம் பிடித்துள்ளார்.
நினைக்கிறேன்....
இந்நிலையில் மும்பை அணியில் மீண்டும் விளையாட இருப்பது குறித்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில், "உங்களுக்கே தெரியும் நான் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். அதன் காரணமாக தற்போது நான் தக்க வைக்கப்பட்டிருக்கும் இடம் சரிதான் என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போதைய இந்திய டி20 அணியில் விளையாடும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அந்த வகையில் என்னை விட மற்ற வீரர்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுத்ததில் மகிழ்ச்சிதான். தற்போதைய இடத்தில் நான் இருக்கும் நிலையும் எனக்கு திருப்தியாகத்தான் உள்ளது.
எனக்கு சிறப்பு...
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு பகுதியாக மீண்டும் நான் இடம் பெற்று இருப்பதில் மகிழ்ச்சி. மும்பையில்தான் நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். இங்கு நிறைய கிரிக்கெட்டும் விளையாடியுள்ளேன். இந்த நகரம் எனக்கு சிறப்பு வாய்ந்தது. மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளது நல்ல உணர்வுகளை கொடுத்திருக்கிறது" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2024.
01 Nov 2024 -
கோவையில் விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Nov 2024சென்னை : கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியும் அறிவித்துள்ளா
-
அமரன் விமர்சனம்
01 Nov 2024இந்திய ராணுவத்தில் சேவை செய்து உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் அமரன்.
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு: விஜய்யின் அறிவிப்பு மீது திருமாவளவன் விமர்சனம்
01 Nov 2024சென்னை : ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்திருப்பது, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது
-
இலங்கையில் விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்
01 Nov 2024ராமேசுவரம் : இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் தாயகம் திரும்பினர்.
-
தங்கம் விலை சரிவு
01 Nov 2024சென்னை : தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளே நேற்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
-
இந்துக்களை புறக்கணித்து விட்டனர்: கமலா, ஜோ பைடன் மீது டிரம்ப் கடும் குற்றச்சாட்டு
01 Nov 2024வாஷிங்டன், கமலா ஹாரிஸும், ஜோ பைடனும் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை நிராகரித்து விட்டனர்.
-
பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2024புதுடெல்லி : பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசாராக இருந்தவர் பிபேக் டெப்ராய் (வயது 69) குடல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு உயிரிழந்தத
-
மாநிலங்கள் உருவாக்க தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
01 Nov 2024புதுடெல்லி, மாநிலங்கள் உருவாக்க நாளினை முன்னிட்டு பல்வேறு மாநில மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தங்களின் வாழ்த்துக்களைத
-
பாக்.கில் குண்டுவெடிப்பு: 7 பேர் பரிதாபமாக பலி
01 Nov 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில், குழந்தைகள் 5 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
மாநிலத்தின் நிதி ஆதாரத்தை பொறுத்தே தேர்தல் வாக்குறுதிகள் இருக்க வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
01 Nov 2024பெங்களூரு, மாநிலத்தின் நிதி ஆதாரத்துக்கு ஏற்ப மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள் இருக்க வேண்டும் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்களிடம் தான் வலியுறுத்தி இருப்பதாக மல்லிகார்
-
பி.பி.எல். நிறுவனர் காலமானார்
01 Nov 2024பெங்களூரு : பிபிஎல் நிறுவனத்தின் நிறுவனரும் தொழிலதிபருமான டிபி கோபாலன் நம்பியார், வியாழக்கிழமை (அக்.31) காலமானார். அவருக்கு வயது 94.
-
வயநாடு பாராளுமன்ற தொகுதியில் பிரியங்கா உள்பட 16 பேர் போட்டி
01 Nov 2024திருவனந்தபுரம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் பிரியங்கா உள்பட 16 பேர் போட்டியிடவுள்ளனர்.
-
சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
01 Nov 2024சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டன.
-
ஸ்பெயினில் மழை-வெள்ளம்: உயிரிழப்பு 150-ஐ தாண்டியது
01 Nov 2024பார்சிலோனா : ஸ்பெயின் நாட்டில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: விவசாயிகளுக்கு சலுகைகளை அறிவிக்க காங்கிரஸ் திட்டம்
01 Nov 2024திருப்பதி, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெண்கள், விவசாயிகளுக்கு சலுகை அறிவிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாளாக குறைப்பு அமலானது
01 Nov 2024சென்னை : ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைக்கப்பட்ட நடைமுறை நேற்று முதல் அமலானது.
-
வேற்று கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப லடாக், லே நகரில் ஆய்வை தொடங்க இஸ்ரோ திட்டம்
01 Nov 2024புதுடில்லி, விண்வெளிக்கும், வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே நகரில், புதிய சோதனைகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது.
-
90 நாட்கள் ஆகியும் வயநாடு மறுவாழ்வுக்காக ஒரு பைசா வழங்கவில்லை: மத்திய அரசு மீது பினராயி விஜயன் சாடல்
01 Nov 2024கேரளா, 90 நாட்கள் ஆகியும் வயநாடு மறுவாழ்வுக்காக ஒரு பைசா வழங்கவில்லை என்று மத்திய அரசு மீது பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்த டிரம்ப்புக்கு விஹெச்பி நன்றி
01 Nov 2024புதுடெல்லி, வங்கதேசத்தில் சிறுபான்மையினர் ஒடுக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்த டொனால்ட் டிரம்ப்புக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) நன்றி தெரிவித்துள்ளது.
-
காஷ்மீர் பா.ஜ. எம்.எல்.ஏ. மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
01 Nov 2024புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தேவேந்தர் சிங் ராணா (வயது 59) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
-
இஸ்ரேலுக்கு உதவியா? - எகிப்து ராணுவம் மறுப்பு
01 Nov 2024கெய்ரோ : இஸ்ரேலுக்கு உதவுவதாக வெளியான தகவலுக்கு எகிப்து ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
முதல்வர் ஆய்வு செய்தும் மெத்தனத்தில் சுகாதாரத்துறை: போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம்களை அமைத்திட வேண்டும் : மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன் வலியுறுத்தல்
01 Nov 2024மதுரை : முதல்வர் ஆய்வு செய்தும் மெத்தனத்தில் சுகாதாரத்துறை உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன், போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: லெபனானில் 24 பேர் உயிரிழப்பு
01 Nov 2024பெய்ரூட் : கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 19 பேர் காயமடைந்தனர் என்றும் லெபனானில் உள்ள அதிகாரபூர்
-
தீபாவளி நாளில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு அதிகரிப்பு
01 Nov 2024புதுடெல்லி, தலைநகர் டெல்லியைப் போலவே மற்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களான மும்பை மற்றும் சென்னையிலும் தீபாவளிக்கு மறுநாள் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருந்தத