முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பும்ரா குறித்து பி.சி.சி.ஐ. விளக்கம்

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பந்துவீச உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரே மாற்றமாக பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பும்ரா இடம்பெறாததற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ள பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில், "வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பும்ரா இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் அணியில் இடம்பெறவில்லை" என்று பதிவிட்டுள்ளது.

_____________________________________________________________________________

மே.இ.தீவுகள் அணி வெற்றி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றிய அசத்திய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் இங்கிலாந்து அணியை 45.1 ஓவர்களில் 209 ரன்களுக்குள் ஆல் அவுட்டாக்கி அசத்தினர். 

பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. இங்கிலாந்து பந்துவீச்சை எந்தவித சிரமமுன்றி எதிர்கொண்ட எவின் லூயிஸ் - பிரண்டன் கிங் விரைவாக ரன்களை சேர்த்தனர். தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் கிங் நிதானமாக விளையாட, மறுமுனையில் லூயிஸ் அதிரடியில் வெளுத்து வாங்கினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்த நிலையில், கிங் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லூயிஸ் இலக்கை நெருங்கும் வேளையில் 94 ரன்களில் ஆட்டம் இழந்தார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் வெறும் 25.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 157 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

_____________________________________________________________________________

ரசிகர்களுக்கும் கான்வே நன்றி

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. அதன்படி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதீசா பதிரானா ஆகிய 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது. இருப்பினும் அந்த அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட இந்தியாவை சேர்ந்த தீபக் சாஹர், நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் மற்றும் கான்வே ஆகியோர் சென்னை சூப்பர் கிங்சின் ரசிகர்களிடையே பெயர் பெற்றவர்கள். 

அதிலும் குறிப்பாக கான்வே 2022 மற்றும் 2023 ஆகிய 2 சீசன்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும், 2023 சீசனில் சென்னை அணி கோப்பை வெல்வதில் முக்கிய பங்காற்றினார். இதனால் அவர் சென்னை அணியின் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் வீரர்களில் ஒருவர். தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாத நிலையில் கான்வே சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "அற்புதமான 2 வருட ஆதரவிற்காக சிஎஸ்கே-வின் அனைத்து விசுவாசமான ரசிகர்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து